5 ரூபா டாக்டர் என்ன டாக்டர்.. எங்க 2 ரூபா டாக்டர பத்தி உங்களுக்கு தெரியுமாங்கோ..? கோயமுத்தூரை கலங்க

கடந்த வருடம் கோயம்புத்தூரை கலங்க வைத்த இறுதி ஊர்வலம் அது. இறந்தவர் அரசியல்வாதியோ, இல்லை பெரும் பணக்காரரோ இல்லை.

பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதிக் காப்பாற்றும் மக்கள் சேவையாற்றும் ஒரு மருத்துவர்.

வாழ்ந்த வாழ்க்கை இறுதி ஊர்வலத்தில் தெரிந்து விடும்' என கிராமங்களில் சொல்வது உண்டு. அதை நிரூபித்துக் காட்டி இருக்கிறது கோவை மக்கள் சேவகனான 20 ரூபாய் டாக்டரின் இறுதி ஊர்வலம்.

2 ரூபாயில் துவங்கி, கடைசியாக இவர் வாங்கிய தொகை 20 ரூபாய். பணமில்லை என்றால் அதையும் கூட கேட்க மாட்டார்.

ஆயிரக்கணக்கானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்று மருத்துவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். சாதி, மதம், ஏழை, பணக்காரர் என எந்த வித்தியாசமும் இல்லாமல், ஆயிரக்கணக்கானோர் கூடினர்....

கோவை மாநகரம் முழுக்க அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. மருத்துவம் என்பது அதிக லாபமீட்டும் பெருந்தொழில் ஆகி விட்ட இன்றைய சூழலில், மக்கள் சேவையை மட்டுமே முன்னிறுத்தி, கிளினிக் நடத்தும் அறைக்கான வாடகைக்காக மட்டும் சொற்பத்தொகையை வாங்கி சிகிச்சை அளித்து வந்தவர் மருத்துவர் பாலசுப்பிரமணியம்.

குடலை அரிக்கும் கெமிக்கலை விற்கும் டாஸ்மாக்...தெரிந்தும் நடவடிக்கை எடுக்காத உணவுப் பாதுகாப்புத் துறை