6-முறை புகார் கொடுத்தும் கண்டுகொள்ளாத கலெக்டர்..!! யார் அந்த முத்துலட்சுமி..? இது புதிதல்ல, ஏற்கெனவே

இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.திருநெல்வேலி மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசி தர்மத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (28).

இவரது மனைவி சுப்புலெட்சுமி (25). இவர்களது மகள்கள் மதி சாருண்யா (4), அக்சயா பரணிகா (2).

திங்களன்று காலை,இசக்கிமுத்து தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு நெல்லை கொக்கிர குளத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர்அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தார்.

பொதுமக்களிடம் மனுக்கள்வாங்கும் கூட்ட அரங்கின் முன்பு குடும்பத்துடன் நின்று கொண்டி ருந்தார். மனுக்கள் கொடுக்க வந்த ஏராளமானோரும் அங்கு நின்றனர்.

திடீரென இசக்கிமுத்து பிளாஸ்டிக் கேனில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து தனது உடலிலும், மனைவி மற்றும்2 குழந்தைகள் உடலிலும் ஊற்றினார்.

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், இசக்கி முத்துவை தடுக்க ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் இசக்கி முத்து தனது மனைவி மற்றும் குழந்தைகளை கட்டிப்பிடித்துக் கொண்டு அனைவரது உடலிலும் தீவைத்தார்.

4 பேர் மீதும் தீப்பற்றிஎரிந்தது. அவர்கள் வலி தாங்க முடியாமல் அலறினர். தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அவர்களின் அருகில் யாரும் செல்ல முடியவில்லை. அங்கு நின்ற போலீசார் மண்ணை அள்ளி எரிந்து தீயை அணைக்க முற்பட்டனர்.

2 குழந்தைகள் சுருண்டு கீழே விழுந்தனர்.உடல் முழுவதும் கருகி, உயிருக்குப் போராடியநிலையில் கிடந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் மீட்டு அங்கு நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு நெல்லை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்று அனுமதித்தனர்.

கடுமையான தீக்காயம் அடைந்த 4 பேரும் கவலைக்கிடமான நிலையில் இருந்தனர். சிகிச்சை பலனளிக்காமல் சுப்புலெட்சுமி, மகள்கள் மதி சாருண்யா, அக்சயா பரணிகா ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். இசக்கிமுத்து உயிருக்குப் போராடி வருகிறார்.

ரூ. 1லட்சத்து 45 ஆயிரம் கடனுக்கு வட்டியோடு ரூ.2லட்சத்து 34 ஆயிரம் 8 மாதத்தில் செலுத்தியும், கடன்கொடுத்த முத்துலட்சுமி தொடர்ந்து மிரட்டியதை, இசக்கிமுத்து குடும்பம் ஆறு முறை புகார் அளித்தும் அலட்சியப்படுத்தியதன் விளைவே இந்தக் கொடூர மரணங்கள்.

காவல்துறை கந்துவட்டிக் கும்பல்களுடன் நெருக்கமாக இருக்கிறது. கடந்த ஆகஸ்ட்டில் நெல்லை டவுனில் கந்துவட்டிக் கொடுமைக்கு கோமதி என்ற பெண் பலியானார்.

2 ஆண்டுக்கு முன்பு பாளையங்கோட்டையில் ஒரு குடும்பமே தற்கொலை செய்தது. எங்கே போனது கந்து வட்டித் தடுப்புச் சட்டம்?