தற்கொலை செய்து கொண்ட பெற்றோர்: மகன் குறித்து எழுதிய உருக்கமான கடிதம்

கவனிக்க ஆள் இல்லாததால் வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்ட நிலையில், இறப்பதற்கு முன்னர் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள கொருக்குபேட்டையை சேர்ந்தவர் சண்முகம் (75) இவர் மனைவி கிருஷ்ணவேணி (65)

இவர்களுக்கு ஆனந்த்குமார் என்ற மகனும், ஜானகி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் தங்கள் குடும்பத்துடன் வெளியூரில் வசித்து வருகிறார்கள்.

சண்முகம் இதய நோயாலும், கிருஷ்ணவேணி சிறுநீரக நோயாலும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள்.

இருவரையும் கவனிக்க ஆள் இல்லாமல் அவதிப்பட்டு வந்ததால் இருவரும் தற்கொலை செய்து இருக்கலாம் என தெரிய வந்துள்ளது.

சம்பவ இடத்தில் பொலிசார் சோதனை செய்த போது வயதான தம்பதியினர் எழுதிய கடிதம் சிக்கியது.

அதில், பொலிசாருக்கு சண்முகம் எழுதிகொள்வது என்னவென்றால், நானும், என் மனைவியும் நோய் தாங்க முடியாத காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.

எங்களது மகன் எங்களை நன்றாக வைத்துக்கொண்டான். அவன் மீது எந்த தவறும் இல்லை. நாங்கள் தற்கொலை செய்து கொண்டதற்காக எங்கள் மகனுக்கு எந்த தொந்தரவும் கொடுக்காதீர்கள் என எழுதப்பட்டுள்ளது.

மரணிக்கும் போதும் தங்கள் மகன் மீதான பாசத்தை பெற்றோர் வெளிப்படுத்தியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் கிட்ட மன்னிப்பு கேட்டுச்சே ஒரு பொண்ணு.. அந்த பொண்ணு யார் தெரியுமா?