ஜெயலலிதா மரணம் பற்றி இனிமேல் பேச மாட்டேன்.!! முக்கிய பிரமுகர்களிடம் பல கோடி ரூபாயை சுருட்டிய தீபா.!!

ஜெயலலிதா மரணம் குறித்து வழக்கு போடாமல் இருக்க தீபா பல கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளார் என்று அவரின் ஆதரவாக இருந்த பசும்பொன் பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருக்கிறது என்று முதல் முதலில் கூறியது தீபா தான்.

ஜெயலலிதா மரணம் குறித்த வழக்கு ஒன்றில், ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் யாரேனும் வழக்கு தொடுத்தால் அதை விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதன் பிறகு, தீபாவின் நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டது.

ஆனால் , இன்று வரை தீபா ஜெயலலிதா மரணம் சம்மந்தமாக வழக்கு தொடுக்கவில்லை.

ஜெயலலிதா மரணம் குறித்து வழக்கு தொடுக்காமல் இருக்க, சசிகலா, தினகரன், திவாகரன், பன்னீர்செல்வம் போன்றோர்களிடம் தீபா இதுவரை 130 கோடிகளுக்கும் மேல் பணம் வாங்கியுள்ளார் என்று பசும்பொன் பாண்டியன் கூறியுள்ளார்.

ஓவியாவுக்காக தற்கொலை கூட செய்துகொள்வேன்! பிரபல இயக்குனர்