இலங்கையில் ஏற்பட்ட விபத்தில் கனேடிய தமிழர் உயிரிழப்பு

கனடா குடியுரிமை பெற்ற செல்லப்பா சுந்தரேஸ்வரன் என்ற 66 வயதான நபர் ஒருவர் கடந்த மாதம் மனைவி மற்றும் பிள்ளைகளுடன் குடும்பமாக தாயகம் திரும்பியுள்ளனர். அவர்கள் உறவினர் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இப்படியிருக்க கடந்த 28ஆம் தேதி விசுவமடுவிலுள்ள தனது நிலத்தை பார்க்க மோட்டார் சைக்கிளில் சென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளனர்.

வீடு திரும்பும் வழியில்,மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள்ளானது . அதனைத் தொடர்ந்து அருகிலுள்ளவர்கள் படுகாயமடைந்த அவரை பூநகரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பின்னர் உயர்மட்ட சிகிச்சைக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சை பயனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.