இலங்கையில் சிறிசேனா ஆதரவு அமைச்சர் திடீர் ராஜினாமா.. ராஜபக்சேவிற்கு கடும் பின்னடைவு!

கொழும்பு: இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு அமைச்சர் மனுஷா நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாளை பிரதமர் ராஜபக்சவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும். முடக்கப்பட்டு இருந்த நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூட உள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டு அமைச்சர் மனுஷா நாணயக்கார தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தொழில் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் இணையமைச்சராக இருந்தார் மனுஷா நாணயக்கார. இவர் அந்நாட்டு அதிபர் சிறிசேனாவின் இலங்கை சுதந்திரா கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில் தனக்கு ஒதுக்கப்பட்டு இருந்த இலாக்காவில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார்.

ராஜபக்சேவை பிரதமராக தேர்வு செய்தது ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை, இது தவறான அரசியல் நடவடிக்கை என்று அவர் கூறியுள்ளார். இந்த முடிவு சிறிசேனா - ராஜபக்சே தரப்பிற்கு பெரிய பின்னடைவாக முடிந்துள்ளது.

[நிலானி பற்றி ஒரு செய்தி.. அட இவர் அவர் இல்லீங்க.. சீனாக்காரர்.. மேட்டர் என்னென்னா!]

ஏற்கனவே ராஜபக்சே நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் உள்ளார். இந்த நிலையில் சிறிசேனா அமைச்சரவையை சேர்ந்த எம்பி ஒருவரே அவருக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து இருக்கிறார்.

இவர் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ராஜபக்சேவிற்கு எதிராக வாக்களிக்க வாய்ப்புள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.