அரசியல் சாசனப்படி ஆட்சி நடத்த வேண்டும்.. இலங்கைக்கு சர்வதேச நீதி வல்லுநர்கள் ஆணையம் குட்டு

கொழும்பு: இலங்கை தனது அரசியல் சாசன நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று சர்வதேச நீதி வல்லுநர்கள் ஆணையம் (ICJ) வலியுறுத்தியுள்ளது.

இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை அதிரடியாக பதவி நீக்கம் செய்த அதிபர் மைத்ரிபால சிறிசேனா, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து உள்ளார்.

அரசியல் சாசனத்தின் 19வது திருத்தத்தின்படி, இவ்வாறு பிரதமரை பதவி நீக்கம் செய்ய முடியாது. மேலும் ரணிலுக்கு அதிகப்படியான எம்பிக்கள் ஆதரவு உள்ளது.

இந்த நிலையில் அதிபர் சிறிசேனா மீது அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்து சர்வதேச நீதி வல்லுநர்கள் ஆணையம் வெளியிட்டுள்ள

கூறியிருப்பதாவது:

முடக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டுவதற்கு அதிபர் சிறிசேனா உத்தரவிட வேண்டும். இதன் மூலமாக அரசியல் சாசன நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.

சட்டத்தின்படியும், குடியாட்சியின் விதிமுறைகள் படியும், இலங்கை அரசு நடைபெற வேண்டும். இலங்கை ஏற்கனவே உறுதி அளித்தபடி அங்கு நடைபெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானத்தை இலங்கை பின்பற்ற வேண்டும்.

இலங்கையில் தற்போது நடைபெற்றுள்ள அதிகார மாற்றம் என்பது அந்த நாட்டை அரசியல் சாசனத்தின் 19ஆவது திருத்தத்திற்கு மாறாக உள்ளது. நாடாளுமன்றத்தின் மாண்பை குறைக்கும் வகையில் நவம்பர் 16ஆம் தேதி வரை அதை ஒத்தி வைத்து உள்ளார் என்றே கருதுகிறோம். இதன் காரணமாகத்தான், அங்கு அரசியல் குழப்பம் அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.