ரணில் வீட்டிற்கு கரண்ட் கட்.. சிறிசேனா அதிரடி நடவடிக்கை.. இலங்கையில் தொடரும் பரபரப்பு!

கொழும்பு: இலங்கையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசித்து வரும் இல்லத்திற்கு மின்சாரம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்போது உச்சகட்ட அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. அங்கு யார் பிரதமர் என்று அரசு அதிகாரிகளுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இந்த பிரச்சனை அருவருப்பாக மாறி வருகிறது.

இலங்கையின் அதிபர் மைத்ரிபால சிறிசேனா, மகிந்த ராஜபக்சேவை பிரதமராக அறிவித்துள்ளார். ரணில் விக்ரம சிங்கே அங்கு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அங்கு அமைச்சர் அர்ஜுனா ரணதுங்காவின் பாதுகாவலர்கள் மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

எங்கு 
எங்கு இருக்கிறார்

இலக்கை பிரதமரின் இல்லம் டெம்பிள் ட்ரீஸ் (Temple Trees) என்று அழைக்கப்படுகிறது.இங்குதான் தற்போது முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வசித்து வருகிறார். பிரதமராக ராஜபக்சே பதவி ஏற்றபின் கூட இவர் அந்த வீட்டில் இருந்து வெளியேற மறுத்து வருகிறார்.

 

மின்சாரம் 
மின்சாரம் நிறுத்தம்

இந்த நிலையில் அவரை வெளியேற வைக்கும் வகையில் அந்த வீட்டிற்கு மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. நேற்று காலை அந்த வீட்டிற்க்கு மின்சாரம் நிறுத்தப்பட்டது. இன்று வரை 24 மணி நேரமாக அங்கு மின்சாரம் இல்லை. முன்னாள் பிரதமருக்கு நேர்ந்து இருக்கும் இந்த கதி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 

பாதுகாப்பு இல்லை 
பாதுகாப்பு நடவடிக்கை

அதேபோல் ரணிலுக்கு கொடுக்கப்பட்டு வந்த பாதுகாப்பு படை பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு 52 அதிகாரிகள் அவருக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். தற்போது இது 8 அதிகாரிகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த பதவியிலும் இல்லாதா கோத்தபய ராஜபக்சவிற்கு 70 அதிகாரிகள் பாதுகாப்பு வழங்குகிறார்கள்.

 

பாதுகாப்பு 
பாதுகாப்பு அதிகரிப்பு

இதனால் ரணில் தற்போது தனக்கு நெருக்கமானவர்களை தனது பாதுகாப்பிற்கு நியமனம் செய்துள்ளார். தனது ஆதரவாளர்களை தான் வசிக்கும் டெம்பிள் ட்ரீக்கு வெளியே சுற்றி நிற்க வைத்துள்ளார். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.