இலங்கைக்கு நானே பிரதமர்.. அதிபர் சிறிசேனாவிற்கு ரணில் விக்ரமசிங்கே பரபரப்பு கடிதம்

கொழும்பு: இலங்கை நாட்டின் பிரதமராக நானே தொடர்கிறேன் என்று அதிபர் மைத்திரிபால சிறிசேனாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில், ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவை திடீரென நீக்கி விட்டு நேற்று இரவோடு இரவாக முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவியை வழங்கினார் சிறிசேனா.

இந்த நிலையில் சிறிசேனாவுக்கு ரணில் விக்கிரமசிங்கே பிரத்தியேக கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், நாட்டின் அரசியல் சாசனத்தின் 42 வது ஷரத்தின் நான்காவது பிரிவின் அடிப்படையில் நான்தான் பிரதமர் என்று ரணில் விக்ரமசிங்கே, அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.

சிறிசேனாவின் இந்த நடவடிக்கை என்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று ஏற்கனவே ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருந்தார் எனவே இப்போது இலங்கையில் பிரதமர் பதவி வகிப்பது போன்ற சூழ்நிலை உருவாகியுள்ளது.