மக்களுக்காக செயற்கை மழை வரை இறங்கி செய்யும் அவங்க எங்க வேடிக்கை பார்க்கும் நம்மாளுக எங்க

இலங்கையில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், தாய்லாந்து நிறுவனம் ஒன்றின் உதவியுடன் செயற்கை மழை பெய்விக்கப்படவிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பருவ மழை தப்பியதால் இலங்கையில் 6 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 3 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முன்னோட்டமாக செயற்கை மழை பெய்விக்கும் முயற்சிகள் இலங்கையின் முக்கிய நீர்த் தேக்கப் பகுதிகளான காசல்ட்றீ, விக்டோரியா, கொத்மலை மற்றும் மஸ்கெலியா ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

விமானத்தின் மூலமோ அல்லது தரையில் இருக்கும் ஒரு இயந்திரம் மூலமோ சில்வர் அயடைட்டு என்னும் வேதியல் பொருள் மேகங்களை இலக்கு வைத்து தூவப்படும். மேகக்கூட்டத்தில் இந்த சில்வர் அயடைட்டு, பனித்துகள்களை உருவாக்கும்.

அந்த ஐஸ் துகள்கள் பாரம் தாங்க முடியாமல், நிலத்தை நோக்கி விழத்தொடங்கும். கீழே வரும் போது அவை கரைந்து மழையாக பொழியும். இந்த அடிப்படையிலேயே செயற்கை மழை பெய்விக்கப்படவுள்ளது.

இலங்கையை பொறுத்தவரை ஒரு பகுதியில் மழை பொய்தாலும்,  மறுபுறத்தில் எல்லினோ காலநிலை காரணமாக பருவம் தப்பி பெய்த மழையால் பெரும் வெள்ளமும் ஏற்படுவதுண்டு.

அவ்வாறு இலங்கையின் கிழக்கு பகுதியில் அண்மையில் நெல் அறுவடைக் காலத்தில் காலம் தவறி பெய்த மழையால் நெற்பயிர்கள் அழிந்து போயின.

தமிழகத்தில் சரியாக பெய்யும் மலைநீரையே தேக்கி வைக்க சரியான நீர் மேலாண்மை திட்டம் வகுக்கப்படாத நிலையில், தமிழகம் அளவில் இருக்கும் ஒரு நாடு செயற்கை மழை சென்றுள்ளது தமிழகத்தின் நிலையை சிறப்பாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ