இலங்கை பிரதமர் ரணிலுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம்

கொழும்பு: இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் சபாநாயகரிடம் கொடுத்துள்ளன.

இலங்கை உள்ளாட்சித் தேர்தலில் மகிந்த ராஜபக்சே அமோகமாக வெற்றி பெற்றார். இதையடுத்து இலங்கை அரசியலில் மீண்டும் மகிந்த ராஜபக்சே தலையெடுத்துவிட்டார்.

இதன் முதல் கட்டமாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை மகிந்த கோஷ்டி கொண்டு வந்துள்ளது. மொத்தம் 55 எம்.பிக்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

அதேநேரத்தில் இத்தீர்மானத்தில் மகிந்த ராஜபக்சே கையெழுத்திடவில்லை எனவும் கூறப்படுகிறது.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ