புலிகளின் ராணுவம் ஒழுக்கமானது என கூறுவதில் தயக்கமே இல்லை மாஜி அமைதிப்படை அதிகாரி

கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளின் ராணுவம் மிகவும் ஒழுக்கமானது எனக் கூறுவதில் தமக்கு எந்த ஒரு தயக்கமும் இல்லை என இந்திய அமைதிப் படையில் பணியாற்றிய அதிகாரி உன்னி கார்தா தெரிவித்துள்ளார்.

1987-89 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற அதிகாரிகள் 9 பேரை கொண்ட குழு அண்மையில் இலங்கை சென்று திரும்பியது. அப்போது இந்திய அமைதிப் படை முகாமிட்டிருந்த வடக்கு பகுதிகளுக்கும் அக்குழு சென்று பல்வேறு இடங்களைப் பார்வையிட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைதிப் படை முன்னாள் அதிகாரியான உன்னி கார்தா கூறியதாவது:

அமைதிப் படை காலத்தில் விமானத்தில் இலங்கைக்கு அடிக்கடி பயணித்தேன். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மிக ஒழுக்கமானவர்கள் என்பதை வெளிப்படுத்த ஒருபோதும் தயங்கமாட்டேன்.

திருவனந்தபுரம், சூலூர் விமான படை தளங்களில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான தளத்துக்கு பயணித்திருக்கிறேன். வடக்கு பகுதி மக்களுக்கு உணவுப் பொட்டலம் வீசிய ஆபரேஷன் பூமாலையும் நினைவில் இருக்கிறது.

இவ்வாறு உன்னி கார்தா கூறினார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ கீழே