கலவரம் கட்டுக்குள் வந்தது இலங்கையில் அவசர நிலை பிரகடனம் திரும்பப் பெறப்பட்டது

கொழும்பு: இலங்கையில் கலவரம் காரணமாக அறிவிக்கப்பட்ட 10 நாள் அவசர நிலை பிரகடனம் திரும்ப பெறப்பட்டது.

இலங்கையில் புத்த மதத்தை சேர்ந்த சிலர் இஸ்லாமிய கட்டிட்டங்கள், மசூதிகள் மீது கடந்த 27ம் தேதி தாக்குதல் நடத்தினார்கள். கண்டி பகுதியில் இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் இந்த தாக்குதல் நடந்து இருக்கிறது. இதில் பலர் மோசமாக காயம் அடைந்தார்கள்.

இதனால் இலங்கையில் சிங்கள மக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இரண்டு வாரம் முன்பு 10 நாள் அவசர நிலை அறிவிக்கப்பட்டது

இலங்கையின் கண்டியில் இந்த கலவரம் நடந்தது. ஆனால் அவசர நிலை அறிவிக்கப்பட்ட பின்பும் கூட அங்கு பெரிய அளவில் கலவரம் நடந்தது.

அங்கு ராணுவம் கொண்டு வரப்பட்டதை அடுத்து கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை சீரானது.இதையடுத்து தற்போது இலங்கையில் அவசர நிலை பிரகடனம் திரும்ப பெறப்பட்டது.

அவசர நிலை பிரகடனத்தை திரும்பப் பெற்றார் அதிபர் மைத்ரிபால சிறிசேன. மேலும் இலங்கையில் நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது என்று மைத்ரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ கீழே