இலங்கை முழுவதும் சமூகவலைதளங்கள் 3 நாட்களுக்கு அதிரடி முடக்கம்

கொழும்பு: இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களர் வன்முறை பரவாமல் இருக்க நாடு முழுவதும் சமூக வலைதளங்கள் 3 நாட்கள் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முஸ்லிம்களை குறிவைத்து சிங்கள பவுத்த பிக்குகள் தலைமையில் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள், வர்த்தக நிறுவனங்கள் சூறையாடப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. வன்முறைகள் அதிகம் நிகழ்ந்த கண்டி மாவட்டத்தில் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை முழுவதும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைதளங்களும் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. 72 மணிநேரம் இந்த முடக்கம் அமலில் இருக்கும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது.