வீட்டிற்கு மேல் தலை கீழாக வீழ்ந்த பேருந்து பலர் நிலை கவலைக்கிடம்

அபன் எல்ல பகுதியில் பயணிகளை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்து ஒன்று இன்று காலை வீதியை விட்டு விலகி வீடு ஒன்றின்மேல் குடைசாய்ந்து விழுந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வலப்பனை நில்தண்டா ஹின்னவிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு தெறிபாஹா நோக்கி பயணித்த தனியார் பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

 

 

இந்த விபத்தில், 37 பேர் படுங்காயமடைந்து வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநரின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த 37 பேரில் 13 பேர் நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் வலப்பனை மற்றும் நில்தண்டாஹின்ன ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.