ராஜபக்சே மகன் பாடிய தமிழ்ப்பாடல் இணையதளங்களில் வைரல்

முன்னாள் இலங்கை அதிபர் ராஜபக்சே - சிராந்தி தம்பதியினரின் மூன்றாவது மகன் ரோகித ராஜபக்ச கடந்த சில ஆண்டுகளாக இசை ஆல்பங்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே ஒருசில சிங்கள பாடல்களை ஆல்பமாக வெளியிட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ள ரோகித ராஜபக்ச, தற்போது தமிழ்ப்பாடல் ஒன்றை பாடி வெளியிட்டுள்ளார்

புதுவித படை ஒன்று கிளம்புது பாரு' என்று தொடங்கும் இந்த பாடல் 3 நிமிடங்கள் 18 விநாடிகளைக் கொண்டது. இந்த பாடல் தற்போது யூ டியூப் இணைய பக்கத்தில் வைரலாகியுள்ளது. தனது தந்தை ராஜபக்சேவின் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் தமிழர்கள் இணைய வேண்டும் என்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தயாரிக்கப்பட்டது இந்த பாடல். இருப்பினும் இலங்கையிலுள்ள தமிழர்கள், மலையக மக்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் பாடலின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பாடல் காட்சிகள் யாழ்ப்பாணம், கொழும்பு மற்றும் மலையகப் பகுதிகளில் பதிவு செய்துள்ளனர்

ரோகித ராஜபக்சே, சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.