இலங்கையில் மீண்டும் ஹீரோவாகும் ராஜபக்சே உள்ளாட்சி தேர்தலில் 909 இடங்களை பிடித்து முன்னிலை

இலங்கையில் மீண்டும் ஹீரோவாகும் ராஜபக்சே...உள்ளாட்சி தேர்தலில் 909 இடங்களை பிடித்து முன்னிலை..,

கொழும்பு : இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் சிங்களர் பகுதிகளில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி சிங்கள பகுதிகளில் பெருன்பான்மையான இடங்களை கைப்பற்றியுள்ளது.

இலங்கையில்,நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.இதில் 
சிங்களர்கள் அதிகம் வாழும் தென்பகுதியில், ராஜபக்சேவின் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 45% வாக்குகளைப் பெற்று பல இடங்களில் வென்றுள்ளது.

இதற்க்கு,அடுத்தபடியாக,ஆளும் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சி சுமார் 30% வாக்குகளைப் பெற்றுள்ளது. தமிழர்களின் தாயக பிரதேசமான வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெருன்பான்மையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

இதனால்,தமிழர் பகுதியில் எந்த அணிக்கும் தனிப்பெரும்பனை கிடைக்காததால் தனித்து ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைக்காது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய முன்னனின், நிலவரப்படி முன்னாள் அதிபர், ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 7,03,117 வாக்குகளைப் பெற்று மொத்தம் 909 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.ஆளும் ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சி 4,69,986 வாக்குகளைப் பெற்று 459 இடங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 75, 532 வாக்குகளுடன் 169 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.