தமிழக மீனவர்களுக்கென புதிய சட்டம் நிறைவேற்ற முடியாது இலங்கை அரசு திட்டவட்டம்

இலங்கை: எல்லை தாண்டும் மீனவர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.17.50 லட்சம் வரை அபராதம் விதிக்க இலங்கை அரசு புதிய சட்டம் கொண்டுவந்துள்ளது. புதிய சட்டத்தில் திருத்தம் வேண்டும் என முதல்வர் பழனுசாமி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து பேசிய இலங்கை அமைச்சர் மகேந்திர அமரவீர, புதிய சட்டத்தில் எந்த திருத்தமும் செய்ய முடியாதென பதில் அளித்துள்ளார். மேலும் தமிழக மீனவர்களுக்கென புதிய சட்டம் நிறைவேற்ற முடியாது என்று அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.