தோண்டும் இடம் எல்லாம் மாணிக்க கற்கள் மக்கள் கையில் சிக்குவதற்குள் அரசு எடுக்கப்போகும் முடிவு

இலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பதுளை பகுதியில் செங்கலடி வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் நேற்று தோண்டும் பணி நடைபெற்ற பொழுது, தோண்டும் இடமெங்கும் மாணிக்க கற்கள் காணப்பட்டதாக அந்த பிரதேச செயலாளர் டீ.எம்.எல்.எச். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அங்குள்ள மாணிக்க கற்களை எடுத்துச்செல்ல பலர் முயன்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் மாணிக்க கற்கள் அரசின் நடவடிக்கையால் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மாணிக்க கல் புதையல் தொடர்பாக ஆபரணங்கள் மற்றும் மாணிக்க கல் அதிகார சபையிடம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணிக்க கற்களை தன் பொறுப்பில் ஏற்றுள்ள  அதிகார சபை, அதனை ஏலத்தில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் இதே பகுதியில் அதிக எண்ணிக்கையிலான மாணிக்க கற்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்தப் பகுதியில் மேலும் பல மாணிக்க கல் புதையல்கள் இருக்கலாம் என சந்தேகப்படுகின்றனர்.