இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம் புதிய சட்டம் அமலானது

கொழும்பு: இலங்கை எல்லைக்குள் மீன் பிடிக்க வந்தால் 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சட்டம் அமலுக்கு வந்து இருக்கிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை ராணுவம் பிறநாட்டு மீனவர்களை அடிக்கடி கைது செய்வது வழக்கம். பெரும்பாலும் தமிழக மீனவர்கள் இதன் மூலம் கைது செய்யப்படுவார்கள்.

இதுவரை இப்படி கைது செய்யப்படும் மீனவர்களுக்கு அபராதமாக குறைந்தபட்ச தொகையாக 15 லட்சம் விதித்து வந்தது. தற்போது இந்த சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டு இருக்கிறது.

அதன்படி எல்லை தாண்டி மீன்பிடித்தால் இனி 60 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இலங்கை அரசு கூறியுள்ளது. அதிக அபராதம் விதிக்கும் வகையில் இலங்கை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு இருக்கிறது.

திருத்தப்பட்ட இலங்கை சர்வதேச மீன்பிடித்தல் சட்டம் அவர்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இதனால் இலங்கை எல்லைக்கு செல்லும் தமிழக மீனவர்கள் பதிப்படைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜீத்தை மாற்றிய விவேகம் இனி அலட்டல் இல்லை