கைது செய்வதால்தான் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவது 50 சதவீதம் குறைந்துள்ளது

இலங்கை கடற்படையினர் கைது செய்வதால்தான் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது 50 சதவீதம் குறைந்துள்ளது என்று இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்களை குறிப்பாக தமிழக மீனவர்களை கைது செய்வதும், அவர்களின் படகுகளை சேதப்படுத்துவதும், அவர்கள் பிடிக்கும் மீன்களையும் பறிமுதல் செய்வது, வலைகளை அறுப்பது போன்ற அட்டூழியங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் மீனவர்கள் நெடிய சோகங்களுக்கு பிறகு தாயகம் திரும்புகின்றனர். சிலர் அந்நாட்டு சிறையிலேயே பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்த நிலையில், இலங்கை மீன்வளத்துறை அமைச்சகம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், "தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பகுதியில் தொடர்ந்து மீன்பிடித்து வந்ததால் இலங்கை மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதைத் தடுக்க கைது நடவடிக்கை மற்றும் படகுகள் சிறைபிடிக்கப்பட்டன.

இதனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பது 50 சதவீதம் குறைந்துள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்டர் விவேகம் அஜீத் சிவா சந்திப்பு நடந்தது என்ன