3 வயது பச்சிளம் குழந்தை வெட்டிக்கொலை இன்று காலை நடந்த பதற வைக்கும் சம்பவம்

இலங்கையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று காலை  3 வயது பச்சிளம் பெண் குழந்தை வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளது

கொலையாளியின் தாயும் அவருடைய இளைய மகனுடைய மகளும் வீட்டில் இருந்துள்ளனர்.

அப்போது அவருடைய மூத்த மகன் ஈஸ்வர் என்பவர் வீட்டில் இருந்த தாய் மற்றும் தம்பியாரின் குழந்தை மீது கொடூரமாக கோடாரியால் வெட்டி தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

இதில் தனுசன் நிக்சையா என்ற குழந்தை கொலை செய்யப்பட்டார். கொலையாளியான ஈஸ்வர் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது தாயார் பரமேஷ்வரி என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கொலையாளி மன நோயாளி என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் தானும் விசம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கொடூரச் சம்பவம் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இந்த சம்பவத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், மேற்கொண்டு விசாரணைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.

பெண்களின் காதலை கண்டுபிடிப்பது எப்படி லவ் வந்துட்டா இப்டியெல்லாம் பண்ணுவாங்களா