இலங்கை ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என உயர்நீதிமன்றம் அறிவிப்பு

ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பிலான தமது தீர்மானத்தை இலங்கை உயர் நீதிமன்றம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளது.

19ஆவது அரசியலமைப்பின்படி, தமது பதவிக்காலம் 5 வருடங்களா அல்லது 6 வருடங்களா என்பதை தெளிவுபடுத்துமாறு ஜனாதிபதி கடந்த வாரம் இலங்கை உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன்படி, 2021ஆம் ஆண்டு வரை, ஜனாதிபதியாக பதவியை தொடர்ந்தும் வகிப்பதற்கு தடைகள் உள்ளனவா என்பது தொடர்பில் ஆராய்வதற்காக 5 அடங்கிய நீதியரசர்கள் குழு ஒன்று நியமிக்கப்பட்டிருந்தது.

பிரதம நீதியரசர் பியசாத் டெப், ஈவா வனசுந்தர, புவனேக அளுவிஹாரே, கே.ரி.சித்ரசிறி மற்றும் சிசிர டி ஆப்று ஆகிய ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழு இது குறித்து ஆராய்ந்து, தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் என, தமது தீர்மானத்தை அறிவித்துள்ளது.

அஜித்தின் பைக்கை திருட நினைத்த விக்ரம் அவரே தெரிவித்த ருசிகர தகவல்