இங்கிலாந்து வளர்ச்சிக்கு யார் காரணம் நினைக்கின்றீர்கள் தமிழர்களால் நாங்கள் பெருமை அடைகிறோம்

தமிழர்களால் தான் நாங்கள் பெருமை படுகிறோம் என இங்கிலாந்து பிரதமர் தெரசா மே தனது டுவிட்டரில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழர் திருநாளாம் தை பொங்கலை விழாவை பற்றி பல நாட்டு அரசியல் தலைவர்களும் தங்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதில் கனடா செல்லவே வேண்டியதில்லை. அந்நாட்டு பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் பொங்கல் விழா அங்கு நடைபெற இருக்கிறது.

சிங்கப்பூரில் ஒரு மாதத்திற்கு முன்பு இருந்தே பொங்கல் விழா கலை கட்ட தொடங்கி விட்டது. அதை போலவே அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்திலும் பொங்கல் விழா கொண்டாட அந்நாட்டு அரசு அரசியல் ரீதியாக அனுமதி வழங்கி விட்டது.

இப்படி உலகமெங்கும் தமிழர் திருநாளிற்கு போட்டி போட்டுக்கொண்டு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்து பிரதமர் தெரசா மேவும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தெரசா மே தனது ட்விட்டர் பக்கத்தில் பொங்கல் வாழ்த்து சொல்லும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் "வணக்கம்" என்று தமிழில் தெரிவித்துவிட்டு பிறகு பேசுகிறார்.

அதில் "இங்கிலாந்து பல்வேறு வழிகளில் வளர்ச்சிப் பெற்றதுக்கு தமிழ் சமூகத்தினர் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

அவர்களால் நாங்கள் பெருமை அடைகின்றோம். உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பழமையான இந்த பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாட எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என கூறியுள்ளார்.

தமிழர்களால் தான் நாங்கள் பெருமைப்படுகிறோம். வரும் ஆண்டு அவர்களுக்கு சிறப்பாக அமையட்டும்" என்று தெரசா மே தெரிவித்துள்ளார்.

தினகரனுக்கு மட்டும் 40 எனக்கு வெறும் 2 தானா வருத்தத்தில் புலம்பித் தள்ளிய எடப்பாடி