ஈழப்போரில் உடல் சிதைத்துக் கொலை செய்யப்பட்ட இசை பிரியா பற்றிய உண்மைகள்

ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்களர்கள் நடத்திய போரில், பலர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். ஆண், பெண் என்ற பெதேமின்றி பலரும் நிர்வாண நிலையில் தலையில் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.

அதிலும், முக்கியமாக ஈழத் தமிழர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த பெண் போராளிகள் பலரை போரின் போது கைது செய்து அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி, கற்பழித்து, பெண்ணுறுப்பில் சுட்டும், கம்பிகளால் துளைத்தும் கனவிலும் எண்ணிப் பார்த்துவிட முடியாத அளவிற்கு கொடுமைப்படுத்தி, படுகொலை செய்தனர் சிங்கள இராணுவ வீரர்கள்.

மனிதத்தன்மையற்ற முறையில் நடந்துக் கொண்டது மட்டுமில்லாது, அந்த செயல்களை வீடியோ மற்றும் படங்கள் எடுத்து பகிரவும் செய்தனர். பெண்களை கற்பழித்து, கொன்று வெற்றுடம்புடன் லாரியில் ஏதோ குப்பைகளை வீசு எறிவது போல தூக்கியெறிந்து கொண்டாடினார் சிங்கள இராணுவத்தினர். இப்படி தங்கள் உயிரை இழந்த பல பெண்களில் ஒருவர் தான் இசை பிரியா.

சிங்கள இராணுவர்களால் கொலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை சேர்ந்த இசைப் பிரியாவின் இயற்பெயர் சோபனா தர்மராஜா. சோபன எனும் இசைப் பிரியா பிறந்தது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நெடுந்தீவு ஆகும்..

இசைப் பிரியா தர்மராஜா மற்றும் வேதரஞ்சினி எனும் தம்பதிக்கு நான்காவது மகளாக பிரந்ததவர். இசைப்பிரியா பிறந்த சில வருடங்களிலேயே, அவருக்கு இதயத்தில் ஓட்டை இருக்கிறது என ஒரு மருத்துவ பரிசோதனையின் போது கண்டறியப்பட்டது.

இதயத்தில் ஓட்டை இருப்பினும், அதனால், அப்போது அவருக்கு உடனடியாக சிகிச்சை எடுக்க வேண்டும் என்ற நிலை இருக்கவில்லை என மருத்துவர்கள் கூறியிருந்தனர். இசைப் பிரியா மானிப்பாய் எனும் இடத்தில் தான் வளர்ந்து வந்தார். அப்பகுதியில் இருந்த கிரீன் மெமோரியல் பள்ளியில் தான் தனது கல்வியை பயின்றார்.

பிறகு, வேம்படி மகளிர் கல்லூரியில் மேற்படிப்பு பயில சேர்ந்தார் இசைப் பிரியா.

ஈழப்போரின் மூன்றாம் கட்டம் அது. 1995ல் நடைபெற்று வந்தது. அப்போது சிங்களரின் இராணுவப் படைகள் யாழ்ப்பாண நகரைக் கைப்பற்றிவிட்டது. இந்த சூழலில், பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் உயிரையும், மக்களையும் காப்பாற்றிக் கொள்ள வன்னிப் பகுதியை நோக்கி இடம்பெயர்ந்து செல்ல துவங்கினார்கள். அதில், சோபனா எனும் இசைப் பிரியாவின் குடும்பமும் ஒன்றாகும்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம்பெயரிந்து போன பிறகு தான், தமிழீழ விடுதலை புலிகளின் குழுவினர் நடத்திய பரப்புரைகள் கேட்டு ஈர்ப்பு கொண்டார் இசைப் பிரியா. பிறகு தன்னை விடுதலை புலிகளின் இயக்கத்துடன் 1999ல் இணைத்துக் கொண்டார். அப்போது தான் சோபனா என்ற அதுவரையிலும் அழைக்கப்பட்டு வந்தவருக்கு இசையருவி என்ற இயக்கப் பெயர் கொடுக்கப்பட்டது.

இசைப் பிரியாவிற்கு போரில் ஈடுபடும் அளவிற்கு உடல்நலம் இல்லை. மேலும், அவருக்கு சிறுவயதிலேயே இருந்த இருதய பிரச்சனை காரணத்தால். அமைப்பின் ஊடகப் பிரிவில் பணியமர்த்தப்பட்டார் இசை பிரியா. இசையருவி என பெயர்பெற்ற இவர், ஊடக துறையில் இணைந்த பிறகே, இசை பிரியா என மாற்றி அழைக்கப்பட்டார்.

நிதர்சனம் என்ற ஊடகத்தில் இசைப் பிரியா செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். மேலும், ஒளிவீச்சு காணொளியிலும் வேலை செய்தார். இசை பிரியாவை தொடர்ந்து அவரது தங்கையும், விடுதலை புலிகள் இயக்கத்தில் இணைந்தார்.

விடுதலை புலிகளின் செய்து பிரிவில் பணியாற்றி வந்த இசை பிரியா காலப்போக்கில் தெருக்கூத்து, மேடை நாடகங்களிலும், கலை நிகழ்வுகளிலும் பங்குப்பெற துவங்கினார். தமிழீழம் சார்ந்து வெளியான சில குறும்படங்களிலும் நடித்துள்ளார் இசை பிரியா.

தனது 26வது வயதில் இசைப் பிரியா மற்றொரு தமிழீழ போராளியான தளபதி ஸ்ரீராம் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களது திருமணம் கடந்த 2007ம் ஆண்டு நடைப்பெற்றது.

ஈழப்போரின் நான்காவது மற்றும் இறுதி போர் நடந்து வந்த 2009ம் ஆண்டு ஸ்ரீராம் - இசை பிரியா தம்பதிக்கு அகல்யா என்ற குழந்தை பிறந்தது. ஆனால், போர் சூழலில் நோய்வாய்ப்பட்டு அகல்யா இறந்து போனார்.

கட்சியின் பெயரை பொங்கல் பண்டிகையில் அறிவிக்கிறார் ரஜினி