வவுனியாவில் நூதனமாக பணம் திருட முயன்றவர்கள் மக்களால் நையபுடைப்பு

வவுனியா கூமாங்குள பகுதியில் தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் என தங்களை அடையாளப்படுத்தி பணம் பெற முயன்ற இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச்சம்மபவம் பற்றி தெரியவருவதாவது,

இன்று (22.12) மதியம் 2 மணியளவில் வவுனியா கூமாங்குளம் பகுதியில் வீடுவீடாக சென்ற இருவர் தம்மை பிரபல தனியார் இலத்திரனியல் நிறுவனத்தின் ஊழியர்கள் என அடையாளப்படுத்திக்கொண்டு பொருட்கள் மலிவு விலையில் தருவதாக கூறி மக்களிடம் முற்பணம் பெற்று வந்துள்ளனர்.

இதனையறிந்த சிலர் இவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து அவர்களை மடக்கிக் பிடித்துள்ளனர். இதனையடுத்து குறித்த நிறுவனத்தை தொடர்புகொண்ட பிரதேசவாசிகள் அந்நிறுவனத்தின் ஊழியர்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டதுடன் குறித்த நபர்களை பண்டாரிகுளம் பொலிஸிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த நபர்கள் மட்டக்களப்பு கதிரவெளி,காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் துரிதப்படுத்தி மேற்கொண்டு வருகின்றனர்.

விபச்சாரத்தில் ஈடுபட்ட இரண்டு இளம் நடிகர்கள் போலீசார் கூறிய அதிர்ச்சி தகவல்