கிழக்கு பல்கலையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வும் இரத்த தானமும்

வந்தாறுமூலை கிழக்கு பலக்லைக்கழகத்தில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வு பூர்வமாக அனுட்டிக்கப்பட்டுள்ளன.

பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், மாணவர் ஒன்றியத்தின் தலைவர் டினேஸ்காந்த தலைமையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி எம்.ரவி, மற்றும் கல்வி சார், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது வீரமரணம் எய்திய மாவீரர்களுக்கு மொளன இறைவணக்கம் செலுத்தப்பட்டு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மாணவர் ஒன்றியத்தின் தலைவரினால் ஈகைச் சுடரேற்றப்பட்டு பின்னர் கலந்து கொண்ட அனைவராலும் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் மாவீரர் தினத்தை கௌரவிக்கும் முகமாக உயிர் கொடுத்த வீரர்களுக்காக உதிரம் கொடுப்போம் எனும் தொனிப் பொருளில் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி