மாவடிமுன்மாரி துயிலுமில்லத்தில் சகல ஏற்பாடுகளும் பூர்த்தி

மட்டக்களப்பு - மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவு தினத்தை அனுஸ்டிப்பதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மாலை சரியாக 6.05 மணிக்கு ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வு தயார் செய்யப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவிக்கின்றது.

மாவடிமுன்மாரி மாவீரர் துயிலுமில்லத்தில் தமது பிள்ளைகளின் வித்துடல்கள் புதைக்கப்படாமல் ஏனைய பல பகுதிகளில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்களில் புதைக்கப்பட்டிருந்தாலும் அங்கு செல்ல முடியாதவர்களும், மாவடிமுன்மாரி துயிலுமில்லத்திற்கு இன்று மாலை நேரில் வந்து ஈகைச் சுடர் ஏற்றி மலரஞ்சலி செலுத்திச் செலுத்தலாம் என ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

“எங்கள் அனைத்து பிள்ளைகளையும் போருக்கு அனுப்பி வைப்போம்!” - பிரபாகரனுக்கு கடிதம் எழுதிய வீரத்தாய்