பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை தடுக்க முடியவில்லை! இலங்கை இராணுவம்

வடக்கில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் இடம்பெற்றதாக எமக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது. எனினும் அதனை தடுக்க முடியவில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கில் மாவீரர் தினம் மற்றும் பிரபாகரனின் பிறந்த தினம் என்பன அங்குள்ள மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

புலிகளை நினைவுகூரும் வகையில் வடக்கில் சில சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக இராணுவத்திடமும் சில முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

மக்களைக் குழப்பும் சம்பவங்களாகவே நாம் இவற்றைக் கருதுகின்றோம். வடக்கில் போரில் உயிரிழந்த பொதுமக்களை நினைவுகூரத் தடைகள் விதிக்கப்படவில்லை.

புலிகளை நினைவுகூருவது தவறான ஒன்றாகும். இது பொதுமக்களுக்கும் தெரிந்த விடயமே. எனினும் இவ்வாறு இடம்பெற்றுவரும் சம்பவங்கள் குறித்து எம்மால் எந்த நடவடிக்கையும் முன்னெடுக்க முடியாது.

அதற்கான அதிகாரம் எமக்கு இல்லை. பொலிஸாரே இதுகுறித்து விசாரிக்க வேண்டும். அதற்கான ஒத்துழைப்புகளை எம்மால் வழங்க முடியும் என இராணுவ பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழினத்துக்காக உயிர்நீத்த மாவீரர்களை அஞ்சலிப்போம்!