வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்தில் கொழும்பு! அபாய எச்சரிக்கை

கடும் மழை பெய்யுமாயின் கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் வெள்ளத்தில் மூழ்கும் பேராபத்து காணப்படுவதாக மாநகர சபை மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

2018ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான நேற்றைய விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

100 ஆண்டுகளுக்கு முன்பு பிரித்தானியர்களால் கட்டப்பட்ட அம்பத்தளை மற்றும் நாகலகம் வீதி அணைக்கட்டுக்கள் ஆகிய ஆபத்தில் காணப்படுகின்றன.

குறித்த அணைக்கட்டுகளே கொழும்பு மற்றும் களனி ஆகிய பகுதிகளை பாதுகாத்து வருகின்றன. இந்த நிலையில் அந்த அணைகள் இரண்டும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. இன்னுமொரு கடுமையான மழையை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டால், தப்பிக்க முடியாது.

இது தொடர்பில் உடனடி கவனம் செலுத்தப்படாவிட்டால், கொழும்பு நகரமும், நாடாளுமன்றமும் வௌ்ளத்தில் மூழ்கும் என குறிப்பிட்டுள்ளார்.

உயிருக்கு போராடும் சிறுவனுக்காக பெற்றோர் செய்த செயல்: நெகிழ்ச்சி சம்பவம்