தமிழ் மக்களை மறக்காத மங்கள! வடக்கு கிழக்கிற்கு ஒதுக்கப்பட்ட நிதி பற்றிய முழு விபரம்..

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கட்டுள்ளது.

இதில் 2018ஆம் ஆண்டு எந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது, அபிவிருத்தி நடவடிக்கைகள் பற்றிய முழுமையான உரையினை நிதியமைச்சர் முன்வைத்திருந்தார்.

மங்களவினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவுசெலவுத்திட்டம் பொதுவாக அனைவராலும் வரவேற்கத்தக்கதாக காணப்படுகின்றது.

இதில் தமிழ் மக்களுக்கும், வடக்கு மற்றும் கிழக்கிற்கும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த வரவுசெலவுத்திட்டத்தில் தமிழர்களையும், வடக்கு கிழக்கையும் நிதியமைச்சர் மறக்காமல், அவர்களுக்கான அபிவிருத்திகளையும் உள்ளடக்கியுள்ளார்.

குறித்த வரவுசெலவுத்திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் வரவேற்பளித்துள்ளனர்.

அந்த வகையில் வடக்கிற்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி பற்றிய விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

 1. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள குடியமர்த்த 2.750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு.
 2. யாழ்ப்பாணத்தில் நவீன பொருளாதார மையம். இதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு.
 3. அம்மாச்சி எண்ணக்கருவை மேம்படுத்தல்
 4. மயிலிட்டியில் மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்தி
 5. வடக்கில் சிறிய தொழிற்துறைகளுக்கு 100 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு
 6. வடக்கில் கடன் சுமையில் சிக்கியவர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் திட்டம்
 7. வடக்கில் 50,000 கல் வீடுகள், விசேட தேவையுடைய மற்றும் பெண் தலைமைத்துவ பெண்களுக்கு வீடமைப்பதற்கு 270 கோடி ரூபா ஒதுக்கீடு.
 8. வடக்கில் முன்னாள் போராளிகளுக்கு தொழில் வாய்ப்புக்கள் வழங்கும் கம்பனிகளுக்கு சலுகை. இதற்காக 400 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
 9. யுத்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 750 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு
 10. அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை மேம்படுத்தல்.
 11. கிளிநொச்சியிலும் நெடுந்தீவிலும் பணை சம்பந்தமான உணவு பதனிடல் நிலையத்தை உருவாக்குதல்.

 

போன்ற அபிவிருத்தி திட்டங்கள் வகுக்கப்பட்டதுடன், வடக்கிற்காக பாரியளவில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

சுவிஸில் இலங்கை இளைஞர்கள் திடீர் கைது!