சைக்கிளில் சென்றதால் மஹிந்த உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட நிலை! நாடாளுமன்ற உறுப்பினர் கவலை

2018ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் நேற்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட போது மஹிந்த உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சைக்கிளில் நாடாளுமன்றுக்கு வருகைத்தந்தனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்பாட்டிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையிலேயே இவர்கள் சைக்கிளில் சென்றுள்ளனர்.

இதன்போது நாடாளுமன்றுக்குள் நுழைவதற்கு மஹிந்த உள்ளிட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், பொலிஸாருக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் விவாதம் ஏற்பட்டு, முறுகல் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான செஹான் சேமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்.

“இலங்கை அரசாங்கம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நேற்று நாடாளுமன்றத்திற்குள் நுழைய விடாமல் பொலிஸாரை பயன்படுத்தி தடை விதித்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீண்டும் மீண்டும் அரசாங்கம் அழித்து வருகிறது.” என அவர் தனது டுவிட்டர் பக்கத்தினூடாக கவலை வெளியிட்டுள்ளார்.

View image on Twitter

View image on Twitter

Shehan Semasinghe @ShehansaShehan

SL government blocks peaceful protest and opposition MPs entering parliament yesterday by using police. The govt is destroying parliamentary democracy again and again @IPUparliament @IPUPresident

12:19 PM - Nov 10, 2017

சைக்கிளில் சென்றதால் மஹிந்த உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட நிலை! நாடாளுமன்ற உறுப்பினர் கவலை