தனது கொடையுள்ளத்தினால் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய சவப்பெட்டி கடைக்காரர்!!

காலியில் நபர் ஒருவர் 69 தடவைகள் இரத்த தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.47 வயதான சாமவினுசுரு பியல் அமரசிங்க என்ற நபரே இந்த அரிய கொடையை செய்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

அண்மையில் அமரசிங்கவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாமில் 69வது முறையாகவும் இரத்த தானம் வழங்கியுள்ளார்.

காலி பிரதேசத்தில் சவப்பெட்டி கடையொன்றை நடத்திச் செல்லும் பியல் அமரசிங்க, அந்தப் பகுதியில் மிகப்பெரிய சமூக சேவையாளராக காணப்படுகின்றார்.

1995 ஆம் ஆண்டும் சவப்பெட்டி கடையை ஆரம்பித்த அமரசிங்க பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகிறார். சிறுவர் இல்லம், ஆதரவற்ற இல்லங்களில் மரணங்கள் ஏற்பட்டால் இலவசமாக இறுதி அஞ்சலிக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார்.

அவரது உயிரிழந்த மனைவியின் நினைவாக அவர் இந்த தானத்தை செய்து வருகின்றார். அதற்கமைய அவர் 69வது முறை இரத்த தானம் செய்துள்ளார்.

100 முறை இரத்த தானம் செய்வதே தனது நோக்கம் என சாமவினுசுரு பியல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சைக்கிளில் வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்!! பாராளுமன்ற வளாகத்தில் சுவாரசியம்!!