அதிகாலையில் பதற்றம் - நால்வர் சுட்டுக்கொலை - பாடசாலை மாணவன் காயம்

தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொஸ்கொட பிரதேசத்தின் 3 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இன்று அதிகாலை இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதன்போது 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

39 வயதுடைய நபர் ஒருவரும், 52 வயதுடைய நபர் ஒருவரும் 13 மற்றும் 20 வயதுடைய அவரது இரண்டு மகன்மார்களுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

கணவரின் நடிப்பு ஆசைக்காக படம் எடுக்கும் அறந்தாங்கி நிஷா…!!