இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

இலங்கை ரூபாயின் பெறுமதி தீடீர் என்று கடுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதன் காரணமாக நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தபோது டொலருக்கு எதிராக 131.05 சதமாக இருந்த இலங்கை ரூபாவின் பெறுமதி தற்போது 155 ரூபாவையும் தாண்டியுள்ளது.

அந்நிய செலாவணி உட்பாய்ச்சலில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலையே இதற்கான காரணமாக கூறப்படுகின்றது.

இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு மத்திய வங்கியின் பிணைமுறி மோசடிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறித்த மோசடி காரணமாக சர்வதேச மட்டத்தில் இலங்கையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன் ஊழல்கள் மலிந்த நாடாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 2015ம் ஆண்டில் ஊழல்கள் குறைந்த நாடுகளின் பட்டியலில் 82ஆம் இடத்தில் இருந்த இலங்கை 2016ஆம் ஆண்டு 95ஆம் இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அந்நிய முதலீடுகள், பங்குச் சந்தை என்பவற்றிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையை மாற்றியமைக்க அரசாங்கம் துரித பொருளாதார மறுசீரமைப்பொன்றை மேற்கொள்ளாது போனால் எதிர்வரும் சில ஆண்டுகளுக்குள் கடன் தவணைகளை கட்டவும் முடியாத நிலைக்கு நாடு தள்ளப்பட்டுவிடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

15 கோடி நஷ்டம்... வம்பு மீது புகார் கொடுத்திருக்கும் தயாரிப்பாளர்