மைத்திரியின் பணிப்புரையை நிறைவேற்றுவதில் சிக்கல்

சுமார் ஆயிரம் கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப் பொருளை எரித்து சாம்பலாக்குவதில் சிக்கல் நிலவுவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பிடிக்கப்பட்ட 928 கிலோ கிராம் எடையுடைய கொக்கேய்ன் போதைப்பொருளை எரித்துவிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை விடுத்திருந்தார்.

இந்த போதைப் பொருளை எரிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. எனினும், இவ்வளவு பெரிய தொகை கொக்கேய்ன் போதைப் பொருளை தகனசாலைகளில் எரித்துச் சாம்பலாக்க முடியாது என அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளர் அறிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அதிக வெப்பநிலையுடன் இயங்கும் புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் எரித்துச் சாம்பலாக்குவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், பொலிஸாரினால் மீட்கப்பட்ட 1078 ஹெரோயின் போதைப் பொருளையும் எரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.

யாழ். குடாநாட்டில் குடும்பமே தற்கொலை! சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு