இலங்கை வீரரை கிண்டலடித்த பாகிஸ்தான் வீரர்: வைரலாகும் வீடியோ

இலங்கை வீரர் சச்சித் பத்திரணவிடம் பாகிஸ்தான் பவுலர் ஹசன் அலி கிண்டலாக சைகை காட்டிய வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இலங்கை- பாகிஸ்தான் அணிகள் இடையில் அபுதாபியில் நேற்று நடந்த முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி மூன்று விக்கெட்களை வீழ்த்தினார்.

போட்டியின் போது இலங்கை வீரர் சச்சித் பத்திரணவுக்கு ஹசன் அலி பந்து வீசினார், அப்போது பேட்டில் பட்ட பந்து அவரின் காலுக்கு அடியிலேயே விழுந்துவிட்டது.

இதை கவனிக்காத சச்சித் பந்து பின்பக்கம் போய் விட்டதாக நினைத்து அந்த திசை நோக்கி பார்த்தார்.

இதையடுத்து அவரருகில் வந்த ஹசன் அலி, வேறு இடத்திலிருந்து வரும் பந்தை பிடிப்பது போல கிண்டலாக சைகை செய்து, பின்னர் சச்சித் அருகில் இருந்த பந்தை குனிந்து எடுத்தார்.

இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

இதன் பின்னர் ஹசன் அலி பந்துவீச்சிலேயே சச்சித் அவுட்டாகி வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அளறப்போகும் ஓவியா ஆர்மி - அதிரடி காட்டப்போகும் ஜுலி!