யாழில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட இளைஞன்! உடனிருந்தவர்கள் வெளியிட்ட புதிய தகவல்

யாழ். அரியாலைப் பகுதியில் நேற்று பிற்பகல் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் குறித்த இளைஞனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

உதயபுரம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய டொன் பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞர் மீதே குறித்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த இளைஞரும் அவரது நண்பரும் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போதே இந்த துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது டொன் பொஸ்கோ ரிக்மனுடன் சென்ற மற்றுமொரு இளைஞன் கருத்து தெரிவிக்கையில்,

“நானும் எனது நண்பனும் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தோம்.

எமது மற்றுமொரு நண்­ப­னின் மோட்­டார் சைக்­கி­ளுக்கு பெற்­றோல் இல்லை என்று கூறி­ய­தால், எமது மோட்­டார் சைக்­கி­ளி­லி­ருந்து சிறிது பெற்­றோலை எடுத்­துச்­சென்று கொடுத்து விட்டு திரும்பி வந்­து­கொண்­டி­ருந்­தோம்.

மணி­யந்­தோட்­டம் சந்­தியை அண்­மித்­த­போது எதிரே மோட்­டார் சைக்­கி­ளில் முகத்தை மூடிய தலைக்­க­வ­சம் அணிந்­த­படி இரு­வர் வந்­த­னர்.

எம்மை அண்மித்ததும் அவர்களது மோட்டார் சைக்கிள் திடீரென நின்றது.

அதில் பயணித்தவர்களில் ஒருவர் துப்பாக்கியை எடுத்துச் சுட்டார்.

இதனால் எனது நண்பனின் முதுகில் காயம் ஏற்பட்டது.

செல்லும் வழியில் எனக்கு மயக்கம் வருகிறது என்று அவர் கூறினார்.

இதையடுத்து அங்கிருந்த முச்சக்கர வண்டி ஒன்றில் நண்பனை ஏற்றிச் சென்றோம்.” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, “குறித்த இளைஞன் தனது வீட்டில் உணவு உட்கொண்டபோது ஓர் தொலைபேசி அழைப்பு வந்தது. அதையடுத்து அவர் உடனடியாக வீட்டிலிருந்து புறப்பட்டார்.

அதன் பின்னர் அவர் சுடப்பட்டார் என்ற தகவல்தான் எமக்கு கிடைத்தது” என்று அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை, குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் யாழ்ப்பாணம் மனியம் தோட்டம் பிரதேசத்தில் கடமையில் ஈடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்டதாகவும், இதனால் பிரதேச மக்கள் பொலிஸ் அதிகாரிக்கு எதிர்ப்பு வெளியிட்டமையினால், அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் சிங்கள ஊடகமொன்று நேற்று செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் ’காலை வணக்கம்’ என பதிவு செய்த இளைஞர் கைது: காரணம் இதுதான்