இங்கிலாந்து டெஸ்டில் அசிங்கப்பட்ட கோஹ்லி...சிரித்துக் கொண்டே அவுட் சொன்ன நடுவர்: வெளியான வீடியோ

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கோஹ்லி தேவையில்லாமல் ரிவ்யூ கேட்டு அசிங்கப்பட்டுள்ளார்.

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 107 ஓட்டங்களும், அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 7 விக்கெட் இழப்பிற்கு 396 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது.

இதனால் 289 ஓட்டங்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி தற்போது 2-வது இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. சற்று முன் வரை இந்திய அணி 66 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியின் போது இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர் பிராட் வீசிய பந்தை எதிர்கொண்ட கோஹ்லி, அதை தடுத்தாடினார்.

வீடியோவைக் காண கிளிக் செய்யவும்....

ஆனால் பந்தானது அருகில் நின்றிருந்த ஸ்லிப்பின் கையில் சிக்கியது. இதனால் இங்கிலாந்து வீரகள் அவுட் கேட்க நடுவரும் அவுட் கொடுத்தார்.

ஆனால் கோஹ்லி பந்து பேட்டில் படவில்லை என்று கூறி, ரிவ்யூ கேட்டார். ஆனால் பந்தானது அவரது கையுறையில் பட்டதால் அவுட் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நடுவர் சிரித்துக் கொண்டே அவுட் கொடுத்தார். ரிவியூ கேட்டு அசிங்கப்பட்ட கோஹ்லி, ஒன்றுமே சொல்ல முடியாமல் பவுலியன் திரும்பினார்.