சிக்கிய வீடியோ ஆதாரம்: கேள்விக்குறியாகும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரரின் எதிர்காலம்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் மது போதையில் தகராறு செய்யும் புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து அணியின் தற்போதைய சிறந்த ஒரு ஆல்ரவுண்டராக இருந்து வருபவர் பென் ஸ்டோக்ஸ் (27). இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், இரு நபர்களுடன் தகராறில் ஈடுபட்டதாகவும், அதில் ஒருவரை கடுமையாக தாக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், அவரது துணைக்கேப்டன் பதவியை பறித்ததோடு, சிறிது காலம் கிரிக்கெட்டிலிருந்து அவரை ஒதுக்கி வைத்தும் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கெதிரான நடைபெறும் ஆஷஸ் தொடரில் இருந்து அவர் நீக்கபட்டறிந்தார்.

வீடியோவை காண....

ஸ்டோக்ஸ் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படமால் இருந்ததாலும், அதேசமயம் தன் மீது எந்த தவறும் இல்லை என்பதிலும் அவர் உறுதியாக இருந்ததால் மீண்டும் நியூசிலாந்து அணிக்கெதிரான தொடருக்கு சேர்க்கப்பட்டார்.

இதனையடுத்து நடைபெற்ற ஐபிஎல் உள்ளிட்ட பல்வேறு தொடர்களில் அவர் சிறப்பாக செயல்பட்டதால் அடுத்தடுத்து நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் இடம்பெற ஆரம்பித்தார்.

இந்த நிலையில் தற்போது மீண்டும் இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. 6 நாட்கள் இந்த வழக்கு நடைபெற உள்ளதால் இந்தியாவிற்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது.

வழக்கு நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஸ்டோக்ஸ் நடத்திய தாக்குதல் தொடர்பான புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் ஆரம்பிப்பதற்கு முன்பாக ஸ்டோக்ஸ் இரு நபர்களில் ஒருவர் மீது சிகரெட் துண்டை தூக்கி வீசுவதை போன்று இடம்பெற்றுள்ளது.

முன்னதாக வழக்கின் தீர்ப்பு ஸ்டோக்ஸ்க்கு எதிராக அமைந்தால் அவரது கிரிக்கெட் எதிர்காலம் பாதிக்கப்படலாம் என கிரிக்கெட் ஆர்வலர்கள் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.