நீங்க உங்க மனைவியுடன் ஊர் சுற்றியது போதும் கோலிக்கு செக் வைத்த பி.சி.சி.ஐ

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி வீரர்கள், தங்களது குடும்பத்தினர் மற்றும் காதலியை பிரிய வேண்டும் என்று, பிசிசிஐ புதிய உத்தரவிட்டுள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதன்படி, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஆடிய இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில், டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்க உள்ளது. இதற்காக, இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இந்திய வீரர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்தும் வகையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவின்படி, இந்திய வீரர்கள் தங்களோடு கூட்டிச் சென்ற மனைவி, குழந்தைகள் மற்றும் காதலிகளை தாய்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து இந்த உத்தரவு நடைமுறைக்கு வருகிறது. திறமையாக விளையாடுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. வீரர்கள் ஓய்வு நேரத்திலும் கிரிக்கெட் பற்றி முழுமையாக சிந்திக்க இந்நடவடிக்கை உதவும் என்று கூறப்படுகிறது.

இந்த உத்தரவால், ஷிகர் தவான், விராட் கோலி கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது. ஷிகர் தவான் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வந்துள்ளார். தற்போது அவரது குடும்பத்தினரை பிரிய நேரிட்டுள்ளது. இதுபோல, விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இவர்கள் ஒன்றாக சுற்றி பார்த்தும், ஒன்றாக சாப்பிட்டு செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இதுபற்றி ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் கோலியும், அனுஷ்காவும் அவ்வப்போது செல்ஃபி வெளியிடுகின்றனர்.

ஆனால், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் புதிய உத்தரவால், கோலியை அனுஷ்கா பிரிய நேரிட்டுள்ளது. விளையாட்டில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்பதால், இந்த விதிமுறையை மதிப்பதாக, கோலி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ரசிகர்களுக்கு சற்று வருத்தம்தான். இனி, கோலி, அனுஷ்காவின் ஜாலி செல்ஃபி எதுவும் வெளிவராது என்பதுதான் அது. மேலும் கோலி கிரிக்கெட்டில் முழுக் கவனத்தை இதன் மூலம் செலுத்த முடியும் என்பதே பி.சி.சி.ஐயின் கணக்காக உள்ளது.