ஐ.பி.எல் மைதானத்தில் சிக்கிய பிரபலங்களின் முத்தக் காட்சிகள்

இந்தியன் பிரீமியர் லீக் வெறும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல, இது ஒரு பெரிய வியாபாரம், இதில் முதலீடு செய்யப்படும் பணமும் அதிகம், எடுக்கப்படும் லாபமும் அதிகம். மார்கெட்டிங், மாடல்கள், பிரபலங்கள் என எப்படி எல்லாம் இந்த ஐபிஎல் தொடரை மக்கள் கண்முன் கொண்டு சேர்க்க முடியுமோ, அதை எல்லாம் கனகச்சிதமாக கொண்டு போய் சேர்க்கிறார்கள் இதனுடைய மார்கெட்டிங் டீம்.

ஐபிஎல் தொடரில் விளையாட்டு வீரர்களின் பங்கை காட்டிலும், தொழிலதிபர்கள், பிரபலங்கள், முதலீட்டாளர்களின் பங்கு தான் அதிகமாக இருக்கிறது தான். அதனால் தான் உலககோப்பை போட்டிகளை காட்டிலும், ஐபிஎல் போட்டிகள் மீதான சுவாரஸ்யமும், பந்தயமும் அதிகமாக இருக்கிறது.

ஐபிஎல் தொடரில் விளையாட்டின் ஆக்ரோஷத்திற்கு இணையாக, கவர்ச்சியும் இருக்கிறது. தங்கள் அணி வெற்றி அடையும் கட்டியணைத்துப் பாராட்டுவது ஏற்றுக் கொள்ள முடியும்.

ஆனால் லிப்லாக் கொடுத்து...? அதுவும் பல ஆயிரக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் முன்...? நடந்துள்ளது. அதுவும் மைதானத்திலேயே. இப்படியான பிரபலங்களின் முத்த காட்சிகளில் கேமரா கண்களிலும் சிக்கியுள்ளன.

சித்து - தீபிகா!

விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த் மல்லையாவும், பிரபல பாலிவுட் நடிகையுமான தீபிகா படுகோனே 2010-11ம் ஆண்டுகளில் மிக நெருக்கமாக பழகி வந்தனர்.

ஒருமுறை தங்கள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் வெற்றிப் பெற்றதை இவர்கள் கட்டியணைத்து, முத்தமிட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இது டிவியிலேயே ஒளிப்பரப்பு ஆனது.

 

ஷேன் வார்னே!

ராயல் சேலஞ்சர்ஸ் அணியை ஒரு வெற்றி அணியாக உருவாக்கியவர் ஷேன் வார்னே. இவர் மைதானத்தில் வைத்து தனது காதலி லிஸ் ஹர்லி என்பவரை முத்தமிடுவது கேமரா கண்களில் சிக்கியது.

 

ரோஹித் ஷர்மா!

ஐபிஎல் தொடரின் ஒரு போட்டியில் களம் புகுவதற்கு முன்னர், தனது ஆசை காதல் மனைவிக்கு தலையில் பாசமுடன் முத்தமிட்டு ரோஹித் ஷர்மா சென்றார். மைதானத்தில் வைத்து தனது மனைவிக்கு கொடுத்த முத்தம் கேமரா கண்களில் அப்பட்டமாக சிக்கின.

 

தவான்!

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஷிகிர் தவான் விளையாடிக் கொண்டிருந்தார். பிறகு, அந்த அணி சன் குழுமம் கைக்கு மாறியது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த ஒரு ஐபிஎல் போட்டியின் போது கணவர் ஷிகிர் தவானுக்கு மைதானத்தில் வைத்து அவரது காதல் மனைவி ஆயிஷா முகர்ஜி அன்புடன் கொடுத்த முத்தம் ஒன்று கேமரா கண்களில் சிக்கின.

 

ஷாருக்கான்!

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும், ஆளவந்தான் படத்தில் கமலஹாசனுடன் ஜோடி சேர்ந்திருந்த ரவீனா டான்டனும் கொல்கத்தா நைட் ரைடர்ஸின் ஒரு ஐபிஎல் போட்டிக்கு நடுவே முத்தமிட்டுக் கொண்ட காட்சி கேமரா கண்களை சிக்கின.

 

காயத்திரி ரெட்டி!

டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் உரிமையாளர் காயத்திரி ரெட்டி, அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த டாரன் லெஹ்மனுடன் போட்டி துவங்குவதற்கு முன்னர் மைதானத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சி கேமரா கண்களில் சிக்கின.

 

ப்ரீத்தி!

முதல் படத்தில், தனது பிஸ்னஸ் பார்ட்னர் மற்றும் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியுன் துணை உரிமையாளருமான நெஸ் வாடியாவுடன் ப்ரீத்தி முத்தமிட்டுக் கொண்டப் போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

இரண்டாவது, ப்ரீத்தி - யுவி ஐபிஎல் காலகட்டத்தில் நெருக்கமாக பழகினார்கள், காதலித்து வந்தனர் என்று வதந்திகள் பரவிய காலக்கட்டத்தில் யுவராஜை கட்டியணைத்து ப்ரீத்தி முத்தமிடும் போது எடுத்தப் புகைப்படம்.

 

இரண்டாவது லட்டு!

ப்ரீத்தி ஜிந்தா - யுவிக்கு மத்தியில் கிரிக்கெட் நட்பை தாண்டி ஒரு உறவு இருந்தது என அவர் கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் கூறப்பட்டு வந்தது. அதற்கு சான்றாக இவர்கள் இருவரும் நெருக்கமாக இணைந்திருக்கும் படங்களும் சில வெளியாகின.

 

டியொடரண்ட் உபயோகம் என்ன தீங்கு விளைவிக்கும்?  வீடியோ