போலி நிதி நிறுவனத்திடம் பணத்தை இழந்த ராகுல் டிராவிட் மற்றும் சாய்னா

இந்தியா அணியின் முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் மற்றும் இந்தியாவின் முன்னணி பூப்பந்து வீராங்கனை சாய்னா, போலி நிதி நிறுவனத்தின் மோசடியால் பணத்தை இழந்துள்ளனர்.

பெங்களூரை சேர்ந்த போலி நிதி நிறுவனம் ஒன்றில், இந்தியா அணியின் முன்னாள் வீரர் ராகுல் டராவிட் ரூபா 30 கோடியையும், இந்தியா பூப்பந்து வீராங்கனை சாய்னா 2 கோடியையும் முதலீடு செய்துள்ளார். இதில் ராகுல் டிராவிட் 20 கோடியையும், சாய்னா 75 லட்சத்தையும் மீள பெற்றுள்ளார்.

இந்நிலையில் தற்போது அந்நிறுவனம் 800 பேரின், ரூபா 800 கோடிக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளது. மேலும் இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர் ராகவேந்திரா ஸ்ரீநாத் என்பவரையும், ஊழியர்கள் சிலரையும் பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.