அட விராத் கோலிய ஒருதலையா காதலிச்ச டேனியலி வியத் இதெல்லாம் பண்ணியிருக்கா

விராத் கோலியை ஒருதலையாய் காதலித்த டேனியலி வியத் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டியவை!

இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டு முத்தரப்பு இருபது ஓவர் போட்டிகளில் விளையாடவுள்ளது. இந்த தொடரில் தான் விராத் கோலி தனக்கு அன்புடன் பரிசளித்த பேட்டுடன் களமிறங்கவுள்ளதாக இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி வீராங்கனை டேனியலி வியத் கூறியுள்ளார்.

இவர் எப்படி விராத் கோலியிடம் இருந்து பேட் பரிசாக பெற்றார், இவருக்கு விராத் கோலி மீது இருந்த ஒருதலை காதல் குறித்து தான் இந்த தொகுப்பில் காணவிருக்கிறோம்...

தலைப்பு செய்தி!

கடந்த 2014ம் ஆண்டு, தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலியை, தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு ட்விட்டரில் பதிவிட்டு இங்கிலாந்து நாளேடுகளில் தலைப்பு செய்தியில் இடம்பெற்றவர் டேனியலி வியத்.

டி-20 உலகக் கோப்பை!

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கடந்த 2014ம் ஆண்டு இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் விராத் கோலியின் அட்டகாசமான விளையாட்டை கண்டு தான் வியந்து போனதாகவும். அதன் பின்னரே கோலியை தன்னை திருமணம் செய்துக் கொள்ளுமாறு ட்விட்டரில் பதிவிட்டதாகவும் டேனியலி வியத் கூறியிருக்கிறார்.

பரிசு!

இதன் பிறகே, விராத் கோலியிடம் இருந்து தான் பரிசாக அவரது பேட் ஒன்றை பெற்றதாகவும் கூறியிருக்கும் டேனியலி வியத், விராத் பரிசளித்த அந்த பேட்டை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அந்த மிருகத்தனமான பேட்டை தான் இந்திய தொடரில் பயன்படுத்தவுள்ளதாகவும் கூறியிருக்கிறார்.

ட்விட்டர் தாக்கம்!

2014ல் ட்விட்டரில் விராத் கோலியை திருமணம் செய்துக் கொள்ள விருப்பத்தை வெளிப்படுத்திய பிறகு அந்தளவிற்கு வைரலாகும் என்று தான் கருதவில்லை என்றும். ஆயிரக்கணக்கான ரீ-ட்வீட்டுகள், பல அழைப்புகள், செய்திகளில் பதிவுகள் என தான் திக்குமுக்காடி போய்விட்டதாகவும். அந்த நிகழ்வை குறித்து கூறியிருக்கிறார் டேனியலி வியத்.

தப்பும்மா!

விராத் மீதும், அவரது விளையாட்டு திறமையின் மீதும் பெரும் விருப்பம் கொண்டிருந்தாலும், விராத் கோலியின் பெயரை சரியாக எழுதக் கூட தெரியாத பாப்பாவாக இருக்கிறார் டேனியலி வியத்.

2017 செப்டம்பர் மாதம் விராத் பரிசளித்த பேட்டை புகைப்படம் எடுத்து பகிர்ந்த அவர், அதன் அடி பாகத்தில் விராத் கோலி பெயரை Virat Kholi என்று தவறாக எழுதியுள்ளார்.

யாரு இந்த பொண்ணு...

இங்கிலாந்தை சேர்ந்த டேனியலி வியத் ஏப்ரல் 22, 1991ல் பிறந்தவர். இவர் கடந்த 2010 மார்ச் மாதம் 1ம் தேதி இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடந்த போட்டியில் அறிமுகம் ஆனார். மிடில் ஆர்டர் பேட்ஸ்வுமன் மற்றும் ஆப் பிரேக் பவுலர் என ஆல்-ரவுண்டர்.