ரோஹித் சர்மா சுதந்திரதின பரிசாக இலங்கை அணிக்கு அளித்த கிப்ட்

ஷிகர் தவான் 90 அடித்தும் இந்திய அணிக்கு ஏமாற்றம் .
கொழும்புவில் நடைபெற்ற நிதாஹஸ் டி20 முத்தரப்பு தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை இலங்கை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 

ஷிகர் தவான் 90 அடித்தும் இந்திய அணி தோல்வி .இந்த இலங்கை அணியின் வெற்றி சுதந்திர தின பரிசு போல் இருந்தது இலங்கை அணிக்கு.
டாஸ் வென்ற இலங்கை முதலில் இந்திய அணியை பேட் செய்ய அழைத்து, திட்டமிட்ட பந்து வீச்சு செய்து  174/5 என்று நிர்ணயித்தது . ஷிகர் தவான் 90 ரன்கள் எடுத்து அபாரமாக ஆடினார்.


இதன்பின் களமிறங்கிய இலங்கை அணிக்கு தொடக்கத்தில் வேகம் காட்டியது. குறிப்பாக ஷர்துல் தாகூரின் முதல் ஓவரில் 27 ரன்கள் அடித்தனர். இந்தியப் பந்துவீச்சை துவம்சம் செய்த குஷல் பெரேரா 66 ரன்கள் குவித்து அவுட் ஆனார்.

இருப்பினும் அடுத்த வந்த வீரர்கள் சோபிக்க தவறவே, ஆட்டம் பரபரப்பாக சென்றது. ஆனால் திஷாரா பெரேரா - தாசுன் ஷானகா ஜோடி, கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடினர். இதனால், 18.3 ஓவர்களில் 5 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றிபெற்றது.