துளியும் பந்தா இல்லாமல் ரயிலில் பயணம் செய்த இந்திய கிரிக்கெட் வீரர்

தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து தாயகம் திரும்பியதும், எந்தவித பகட்டும் இல்லாமல் வழக்கம் போல் ரயிலில் சென்று அசத்தி அனைவரது மனதிலும் இடம் பிடித்துவிட்டார் ஷர்டுல் தாக்கூர்.

ஷர்டுல் தாக்கூர்

மும்பையை சேர்ந்த வேகப் பந்து வீச்சாளர் தான் ஷர்டுல் தாக்கூர்.

Shardul Thakur

கடந்த ஒரு ஆண்டாகவே இந்திய டீமில் பல போட்டிகளுக்கு தேர்வு செய்யப்பட்டார். எனினும் கடந்த செப்டம்பர் மாதம் வீரர்கள் சுழற்சி காரணமாக இந்தியா இலங்கை இடையேயான நான்காவது ஒரு நாள் போட்டியில் இவருக்கு வாய்ப்பு அளிக்கப் பட்டது.

தன் பந்துவீச்சால் கிடைக்காத பெயர் இவருக்கு தான் அணிந்த ஜெர்சி வாயிலாக கிடைத்தது. சச்சினின் நெ.10 பொருத்திய ஜெர்ஸியை இவர் அணிந்தார். கிரிக்கெட் மற்றும் சச்சினின் ரசிகர்களிடம் இருந்து வலை தளங்களில் பல எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது.

Shardul Thakur

இந்த சர்ச்சையை தவிர்க்க சச்சின் டெண்டுல்கர் பயன்படுத்திய ஜெர்ஸி எண்ணான 10-க்கு ஓய்வு கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது வேறு கதை.

ரயிலில் பயணித்த ஷர்டுல் தாக்கூர்

மும்பை மாநகரை பொறுத்தவரை ரயிலில் தான் ஈஸியாக ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு வேகமாக செல்ல முடியும். அப்படி தான் தாக்கூரும். தன் சிறு வயது முதலே பால்கரில் இருந்து கிரிக்கெட் ப்ராக்டிஸ் செய்ய மும்பை வருவதற்கு ரயிலை தான் பயன் படுத்துவாராம்.

Shradul Thakur

எனினும் தென் ஆப்பிரிக்கா தொடர் முடிந்து இந்திய திரும்பியதும், இவர் விமான நிலையத்தில் இருந்து டாக்ஸி, காரில் செல்லாமல் அந்தேரி ரயில்நிலையத்திற்கு வந்து ரயிலில் தன் வீடு நோக்கி பயணித்துள்ளார்.

Shradul Thakur

பலர் அவரை எங்கோ பார்த்து போல் உள்ளதே என்று தோன்றியதும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது . சிலர் இவர் இந்திய அணியின் இளம் வேகப்பந்துவீச்சாளர் ஷர்டுல தாக்கூர் என அடையாளம் கண்டுகொண்டனர். வேறு சிலரோ கூகுளில் இவரைப்பற்றி தேடி உறுதி செய்து கொண்டனர். அவருடன் செல்ஃபி எடுக்க சிலர் ஆசைப்பட, பால்கர் ரயில் நிலையம் வந்ததும் போட்டோ எடுத்துக்கொள்ளலாம் என்று பதில் அளித்துள்ளார் இவர்.

Shradul Thakur

இதுகுறித்து பேசிய சர்துல் தாக்கூர், “இந்திய கிரிக்கெட் வீரர் ;ரயிலில் பயணம் செய்வதை பார்த்து சிலர் வியப்படைந்தனர். தற்பொழுது என்னை பார்ப்பவர்கள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் எப்படி இருந்தேன் என்று ஞாபகப்படுத்திக் கொள்வார்கள். எங்களுடன் பயணம் செய்யும் பையன் இப்போது இந்தியாவில் விளையாடி வருகிறான் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவ்வளவு எளிதில் நான் இந்த பயணத்தை மறக்க முடியாது. கடின உழைப்பால் தான் இந்த நிலையை அடைந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

மும்பைக்காக உள்ளூர் போட்டியில் விளையாடும் இவர் இதற்கு முன் பஞ்சாப் மற்றும் புனே அணிக்கு விளையாடியுள்ளார். இந்த வருடம் ஐபில் இல் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார்.

Shradul Thakur

மேலும் இவர் நம்பர் 10 தவிர்த்துவிட்டு தன் ஜெர்சி நும்பரை 54 என மாறியுள்ளார்.