வெற்றி பெற்ற பிறகும் மகிழ்ச்சி இல்லாத தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி

இந்தியா-தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரின்  நான்காவது போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. 

மழை காரணமாகவும், வெளிச்சம் பிரச்சனை காரணமாகவும் போட்டி இடையிடையே தடைபட்டது .  மழை வந்த பிறகு ஆடுகள தன்மை மாறியதாலும், இந்திய அணியின் சில சொதப்பல் பீல்டிங் காரணமாக இந்திய அணி தோல்வி அடைந்தது.

மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பலால், 300 ரன்களுக்கு மேல் எடுக்க வேண்டிய இந்திய அணி 289 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாபிரிக்க அணி ஆடிய போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 28 ஓவராக குறைக்கப்பட்டு 202 ரன்கள் இலக்காக மாற்றப்பட்டது.  கடந்த மூன்று ஆட்டங்களில் இந்திய வெற்றிக்கு கைகொடுத்த சுழற்பந்து வீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் சொதப்பியதால் தென்னாப்பிரிக்க அணி எளிதாக வெற்றிபெற்றது.

இப்போட்டியில் ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமான நேரத்தை தென்னாப்பிரிக்க அணி பந்துவீச எடுத்துக்கொண்டதால், ஐசிசியின் போட்டி நடுவர்கள், தென்னாப்பிரிக்க அணிக்கு அபராதம் விதிக்க பரிந்துரைத்தனர். நேரம் அதிகமாக எடுத்துக்கொண்டது உறுதி ஆனதால் அந்த அணியின் கேப்டன் மார்க்ரமிற்கு போட்டி ஊதியத்தில் 20 சதவீதமும்  மற்ற வீரர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதமும்  ஐசிசி அபராதம் விதித்துள்ளது. 

புதிய கேப்டன் மார்க்ரம் முதன்முறையாக இந்த தண்டனையில் சிக்கியுள்ளார். இந்த வருடத்திற்குள் இன்னோரு முறை சிக்கினால் 2 ஒருதின போட்டி அல்லது 1  டெஸ்ட் போட்டி விளையாட தடைவிதிக்கப்படும்.