தவறான நேரத்தில் சரியாக க்ளிக் செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்களின் போட்டோ

நாம் நம்மை மறந்து எதாவது வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, நமக்கே தெரியாமல் ஏடாகூடமாக போட்டோ எடுத்துவிடுவார்கள். அப்படி ஒரு போட்டோ எடுத்ததே நமக்கு தெரியாது. சில நாள் கழித்து அதை நமது வாட்ஸ்அப் க்ரூப் அல்லது ஃபேஸ்புக் வாலில் டேக் (Tag) செய்து அலப்பறைய கூட்டும் போதுதான்... அடச்சே! இதோ எப்போத் எடுத்தானுங்க என்று தலையில் அடித்துக் கொள்வோம்.

கண்ட இடங்களில் நோண்டுவதில் இருந்து ஏதாவது பெண்ணை வெறிக்க, வெறிக்க சைட் அடிப்பது வரை பல வகைகளில் நாம் இப்படி சிக்க வாய்ப்புகள் இருக்கிறது. சாதாரண மக்களாக இருந்தால் பர்சனலாக ஒரு குறிப்பிட்ட கூட்டத்திற்கு மட்டும் அது ஷேராகும். இதுவே அவர்கள் பிரபலங்களாக இருந்துவிட்டால்... எந்த காலத்திலும் அழிக்க முடியாதபடி வரலாற்று நிகழ்வாக மாறிவிடும்.

இப்படியாக நமது இந்திய வீரர்களின் சில வேடிக்கையான புகைப்படங்களும் க்ளிக்கப்பட்டுள்ளன. அவற்றின் தொகுப்பு தான் இது!

சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங், இருவரும் திருமணம் ஆவதற்கு முன் ஒன்றாக டைட்டானிக் போஸ்டர் முன் ரொமாண்டிக் போஸ் கொடுத்த போது க்ளிக்கப்பட்ட புகைப்படம்.

ஒரு ஆம்பள இன்னொரு ஆம்பளைய டச்சு பண்ணலாம்... ஆனா, இந்த மாதிரி இடத்துல டிச்சு பண்ணக கூடாதுன்னு தெரியாதா இர்பான் பதான்... உயரத்த பார்த்தா... டிச்சுக்கு உள்ளான அந்த பயப்பக்கி நம்ம இஷாந்த் ஷர்மா மாதிரி இல்ல இருக்கு.

இந்தியாவுக்கு எதிராக விளையாடும் நல்ல பேட்ஸ்மேன்களுக்கு அது ஒரு கனாக்காலம், தம்பி இஷாந்த் ஷர்மா பந்தை தூக்கி கொண்டு ஓடி வந்தாலே பந்தை பவுண்டரிக்கு விரட்டுவார்கள். அப்படி ஒரு பந்தை ஆஸ்திரேலிய வீரர் பவுண்டரிக்கு அடித்துவிட்டு ஓடிக் கொண்டிருந்த போது, தரையில் படுத்து பந்தை வேடிக்கை பார்த்த இஷாந்த்.

Image Source: Google

இனிமேல் இந்த அற்புத காட்சியை காண வேண்டும் என்றால், யூடியூப் பக்கமாக தான் ஒதுங்க வேண்டும்.

ஆத்தா... நீ உம்மட காட்டுல தனியா உட்காந்து எத்தன நேரம் வேணாலும் தனியா சிரி ஆத்தா... என்று கவுண்டமணி கூறுவது போல தான்... அப்பா சாமி... நெஹ்ராவின் இந்த வெற்றி களிப்பு வேறு ரகம்.

நெஹ்ரா பந்தில் அவுட்டான சூழலை காட்டிலும், இந்த வேற லெவல் ரியாக்ஷனை காண்பது தான் மிகவும் கடினம்!

Image Source: Google

புற்று நோயை ஓட, ஓட விரட்டிய பிறகு... கொக்காணி காட்டி சிரிக்கும் யுவராஜ் சிங். இந்திய கிரிக்கெட் வீரர்களில் மிகவும் கேலியான நபர் யுவராஜ் சிங் தானாம். தன்னை சுற்றி இருக்கும் நபர்களை வம்பிழுத்துக் கொண்டே இருப்பார் என்று கூறுவதுண்டு. ஆனால், இடைப்பட்ட காலத்தில் இவர் ஒருமாதிரி என்ற கருத்தக்களும் உலாவந்தன.

Image Source: Google

இந்தியாவின் ஒரு டெஸ்ட் போட்டியின் நடுவே தேனீக்கள் மைதானத்திற்குள் தாக்குதல் நடத்த, போட்டி நடுவர், பேட்ஸ்மேன், ஃபீல்டர்கள் உட்பட அனைவரும் குப்புறப்படுத்து தற்காத்துக் கொண்ட போது க்ளிக்கியப்படம்.

Image Source: Google

டெல்லி, பெங்களூரு அணிகளுக்கு இடையே நடந்த ஐ.பி.எல் போட்டி மழை காரணமாக நிறுத்தப்பட்ட போது யுவராஜ் சிங் மற்றும் கெயில் கேலி செய்து நக்கலடித்துக் கொண்ட போது, தனது பேட்டால்.... யுவராஜை அடிக்க கெயில் விரட்டிய போது க்ளிக்கியப்படம்.

Image Source: Google

தொடரை வென்று பதக்கத்துடன் யுவராஜ் மீது ஏறி உட்கார்ந்து களைப்பாறும் தோனி.

Image Source: Google

ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை வென்ற பிறகு பரிசளிப்பு விழாவில் கோப்பை வாங்கி போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் போது, வெற்றி மகிழ்ச்சியில் முன்னாடி வந்து கங்கம் டான்ஸ் ஆடி மகிழ்ந்த விராட் கோலி.