சிங்கிள் ஓடியே செஞ்சூரி அடித்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர்

தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட்,6 ஒருநாள், 3 டி 20 போட்டிகளில் பங்கேற்கிறது.

டெஸ்ட் போட்டிகளில் 1:2 கணக்கில் தென்னாப்ரிக்காவிடம் தோல்வி அடைந்து தொடரை இழந்த இந்திய,அடுத்து நடந்த மூன்று ஒருநாள் போட்டிகளிலும் தொடர்ந்து வெற்றிபெற்று அசத்தி வருகிறது.

இரண்டாவது ஒருநாள் போட்டியில் அதனது 33 வது செஞ்சூரியை பதிவு செய்து அசத்திய கேப்டன் விராட் கோலி,மூன்றாவது போட்டியிலும் செஞ்சூரி அடித்து சாதனை படைத்துள்ளார்.   

34 வது செஞ்சூரி அடித்தது சாதனை என்றல்,அதை சிங்கிள் ஓடியே 100 ரன்களை எடுத்தது சாதனைகளும் சாதனையாக அதாவது  சிங்கிள் ஓடியே 100 ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நேற்று நடந்த மூன்றாவது போட்டியில், 3-வது வீரராக களம் இறங்கி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்த விராட்,159 பந்துகளை சந்தித்து 160 ரன் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் அடங்கும்.

அவர் அடித்த 160 ரன்களில், பவுண்டரி, சிக்சர் மூலம் 60 ரன்களும், மீதியுள்ள 100 ரன்களை ஓடியே எடுத்தார். சிங்கிள் ரன்னாக 75 முறையும் (75 ரன்), டபுல்சாக 11 தடவையும் (22 ரன்), 3 ரன்களாக ஒரு தடவையும் (3 ரன்) எடுத்தார்.இதன் மூலம்100 ரன்களை ஓடி எடுத்த முதல் இந்தியர் கோலி என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.இதுவே சர்வதேச அளவில் 5-வது வீரர் ஆவார்.

முன்னதாக, இதே மைதானத்தில் இதே தினத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டுபிளிஸ்சிஸ் 103 ரன்களை (ஸ்கோர் 185) ஓடி எடுத்திருக்கிறார்.

மேலும், கோலி அதிகமான பந்துகளை சந்தித்தது இதுவே முதல்முறையாகும். 2012 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக டாக்கா மைதானத்தில் 148 பந்தில் 183 ரன்கள் எடுத்தார். 

இந்திய தொடக்க வீரர்கள் அல்லாத வகையில் அதிக பந்துகளை சந்தித்தவர் கோலி ஆவார். இதற்கு முன்பு அசாருதீன் 154 பந்தில் 83 ரன்கள் (1986) எடுத்து இருந்தார்.