இதுதான் இந்திய வெற்றிக்கு காரணமா புகுந்து விளையாடும் சாஹல் குல்தீப் ஜோடி

கேப்டவுன் : தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட் 6 ஒருநாள் போட்டி 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

டெஸ்ட் தொடரில் 1:2 என்ற கணக்கில் தோல்வியடைந்தாலும்,ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று தென்னாப்ரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தொடர்ந்து,அதன் சொந்த மண்ணிலேயே, தென்னாப்பிரிக்காவை நான்கு போட்டிகளில் வென்றிருப்பது பெரிய சாதனை.வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே இல்லை.

தென்னாப்பிரிக்க பேட்ஸ்மேன்களுக்கே என்ன நடக்கிறது என்று தெரியாத அளவிற்கு நம் ஸ்பின் பவுலிங் இருக்கிறது.இதற்க்கு முக்கிய காரணம் இந்தியவின் ரிஸ்ட் ஸ்பின் பவுலிங்தான் என்று சொல்லலாம்.

இந்தியாவின் இளம் வீரர்களான சாஹல், குல்தீப் ஜோடி இந்த ஸ்டைலை வைத்துத்தான் கலக்கிக் கொண்டு இருக்கிறார்கள்.கிரிக்கெட் உலகில் நடக்கும் அதிசயங்களில் இந்த ரிஸ்ட் ஸ்பின்னிங்கும் ஒன்று.

பொதுவாகவே தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு சுழற் பந்தை எதிர்கொள்ள தெரியாது.நமது ரோஹித் எப்படி பவுன்சர் பந்துகளுக்கு திணறுவாரோ அப்படித்தான் அவர்கள் ஸ்பின் பாலுக்கு திணறுவார்கள்.அதிலும் குறிப்பாக ரிஸ்ட் ஸ்பின் என்றால் சுத்தம். சமீப காலமாக அவர்கள் ஆஃப் ஸ்பின் பாலுக்கு கூட விளையாடத் தொடங்கிவிட்டார்கள்.

சுழற் பந்து வீச்சில் இரண்டு வகையான முக்கிய பிரிவு இருக்கிறது. பந்தை விரல் மூலமாகச் சுற்றுவது பின்கர் ஸ்பின். அதற்குப் பதிலாக மணிக்கட்டைச் சுற்றி சுண்டு விரல் மூலம் பந்தை வெளியேற்றுவது ரிஸ்ட் ஸ்பின். இந்த முறை மிகவும் கடினமான ஒன்றாகும்.

அதிலும், லெக் ஸ்பின் , சைனா மேன் ஸ்பின் என இரண்டு வகை உள்ளது.  இதில் லெக் ஸ்பின் எதிர் கடிகார முள் திசையில் ஸ்விங் ஆகும். இது வலது கை பந்து வீச்சாளர்கள் மூலம் எறியப்படும். இதுதான் சாஹல் போடும் ஸ்டைல். சைனா மேன் என்பது குல்தீப் போடும் ஸ்டைல். இது கடிகார முள் திசையில் ஸ்விங் ஆகும். பொதுவாக இடது கை ஸ்பின்னர்கள் இப்படிப் போடுவார்கள்.

இப்படி மாறிமாறி வீசுவதுதான் தற்போது இந்திய அணிக்குக் கைகொடுத்து இருக்கிறது. சாஹல் குல்தீப் ஜோடி அதிக விக்கெட் எடுப்பது இப்படித்தான். இதனால், அஸ்வினும் இந்த சூட்சுமத்தை கற்றுக்கொண்டு இருக்கிறார். வரும் ஐபிஎல் போட்டியில் அவர் லெக் ஸ்பின் பவுலிங் போட உள்ளார்.